எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வௌியேற தடை 

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வௌியேற தடை 

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வௌியேற தடை 

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 8:04 pm

Colombo (News 1st) எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ​தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன அறிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்