தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

தனியார் பஸ் உரிமையாளர்களிடம் சில கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 10-11-2020 | 1:46 PM
Colombo (News 1st) தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தலுக்கான கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனு கோரல் கட்டணம், பதிவுகள் மற்றும் நுழைவுக் கட்டணம், அதிவேக வீதிகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் என்பனவற்றை அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை கருத்திற்கொண்டு இந்த சலுகையை இவ்வருட இறுதி வரை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.