சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

by Staff Writer 10-11-2020 | 10:25 PM
Colombo (News 1st) சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியை விற்பனை செய்ய வேண்டிய அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாவாகும். பொதியிடப்படாத சீனி ஒரு கிலோகிராமை 85 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. சீனி இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம் சீனியை விற்பனை செய்ய வேண்டிய அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாகும்.