வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி பசில் தலைமையில் கூடியது

வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி பசில் தலைமையில் கூடியது

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2020 | 8:15 pm

Colombo (News 1st) பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அதன் தலைவர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று கூடியது.

உரம் இறக்குமதி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்குமாறும் பசில் ராஜபக்ஸ இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான நீர் மற்றும் உரத்தை முறையாக விநியோகிப்பதன் மூலம் குறுகிய காலத்தில் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்திற்கு 7,08,910 மெட்ரிக் தொன் உரம் தேவைப்படுகின்றமையும் இதன்போது தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்