யாழ். ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்தை அண்மித்த பகுதியிலிருந்து உலோகச் சிலைகள் மீட்பு

யாழ். ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்தை அண்மித்த பகுதியிலிருந்து உலோகச் சிலைகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2020 | 9:01 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மானிப்பாய், ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து உலோகச் சிலைகள் சில மீட்கப்பட்டுள்ளன.

அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம், ஓடக்கரை நாகதம்பிரான் ஆலய சுற்றுப்புறத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று மயில் சிலைகளும் தெய்வ விக்கிரகமொன்றுமே மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் எந்தக் காலத்திற்குரியவை, அதன் பெறுமதி தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிலைகள் மீட்கப்பட்ட இடம் உரிமையாளரற்ற காணி என்பதால், அவற்றை விசாரணைகளின்றி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்