கமலின் விக்ரம் திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர் வௌியானது

கமலின் விக்ரம் திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர் வௌியானது

கமலின் விக்ரம் திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர் வௌியானது

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Nov, 2020 | 3:45 pm

கமல் ஹாசனின் புதிய திரைப்படமான ”விக்ரம்” திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர் (Title teaser) வௌியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காட்சியாகவுள்ள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்த தினமான நேற்று முன்தினம் (07) இந்த திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வௌியாகியிருந்தது.

அவரின் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பில் இந்நாட்களில் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை வௌிவந்துள்ளமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை ராஜ் கமல் தயாரிக்கவுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் மாஸ்டர் படத்தினை முழுமையாக இயக்கி முடித்துள்ள நிலையில், இந்த படம் வௌியாகவுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் போன்ற விடயங்கள் இதுவரை வௌியாகவில்லை என்பதுடன், இந்த படம் எதனை மையமாகக் கொண்டு வௌிவர இருக்கின்றது என்பது குறித்தும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கொரோனா காலப்பகுதி என்பதால் குறைந்தளவு ஆளணி வளத்துடன் குறித்த டைட்டில் டீஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1986 இல் ” விக்ரம்” என்ற பெயரில் கமலின் படம் வௌிவந்திருந்ததுடன், அதுவும் அதிக வசூலைப் பெற்றுக்கொடுத்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்