ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 91 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 91 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 91 பேர் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Nov, 2020 | 9:58 am

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று காலை நீக்கப்பட்ட காலப்பகுதி வரையில் 2923 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் 438 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்