by Fazlullah Mubarak 09-11-2020 | 10:03 AM
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.