வடிகானிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

உடப்பு சந்தி வடிகானிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

by Staff Writer 09-11-2020 | 2:03 PM
Colombo (News 1st) புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் உடப்பு சந்தியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கமைய உடப்பு சந்தியின் வடிகானிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். அங்குனவில் -அக்கரவெளியைச் சேர்ந்த 65 வயதான முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.