இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை

இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை

இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2020 | 3:01 pm

Colombo (News 1st) இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை பட்டாசுகளை விற்கவோ பயன்படுத்தவோ​ தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட காற்று மாசு அதிகமுள்ள மாநிலங்களில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளி மாசு அதிகரித்துள்ள சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயற்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்