இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2020 | 6:19 pm

Colombo (News 1st) இதுவரை 109 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் வெலிக்கடை சிறைச்சாலை, பழைய போகம்பரை சிறைச்சாலை மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை சேர்ந்தவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 595 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,880 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

5,014 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 13,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதால் சிறைச்சாலையில் நெரிசலை குறைக்க முடியுமென குற்றப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனைக் கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்