மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 71பேர் இலங்கை வருகை

03 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் 71 பேர் இலங்கைக்கு

by Staff Writer 08-11-2020 | 11:48 AM
மூன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் 71 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர். ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து 19 பேரும் துபாயிலிருந்து 35 பேரும் கட்டாரிலிருந்து 17 பேரும் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.