தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ முடியாது

by Staff Writer 08-11-2020 | 4:19 PM
Colombo (News 1st) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த பொலிஸ் பிரிவுகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வௌியேறவோ வௌியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் பிரவேசிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்தார். குறித்த பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் தொழில் நிமித்தம் அங்கிருந்து வௌியேற முடியாதெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளூடாக வாகனங்களை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் கூட அங்கு வாகனங்களை நிறுத்த முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விநியோக நிலையங்கள், பல்பொருள் வர்த்தக நிலையங்கள் மருந்தகங்கள், வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரச ஊழியர்கள், பொலிஸார், அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்​களும் அதே பகுதிகளில் தங்கியிருக்க வேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்