ஒற்றுமையே எனது நோக்கம் - ஜோ பைடன்

ஒற்றுமையே எனது நோக்கம் - ஜோ பைடன்

by Staff Writer 08-11-2020 | 1:28 PM

பிளவை ஏற்படுத்தாமல் ஒற்றுமைக்கான ஜனாதிபதியாக செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தனது எதிர்த்தரப்பு வேட்பாளர் அமெரிக்க சமகால ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகூடிய தேர்தல் கல்லூரிகளில் வெற்றியை உறுதி செய்து தனது பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டதன் பின்  முதலாவதாக ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகவுள்ளதாகவும் இதன்போது  ஜோ பைடன் கூறியுள்ளார். மத்திய வர்க்கத்தினரை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் கௌரவத்தை மேலும் உயர்த்த வைப்பதே தமது நோக்கமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜோ பைடன், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவரது பாரியார் ஜில் பைடன் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸூம் இதன்போது உரைாயற்றினார். ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் கல்வியூடாக அமெரிக்காவில் புதிய நாளொன்று மலர்ந்துள்ளதாக, அவர் இதன்போது தெரிவித்தார்.