எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம்

எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம்: கமலா ஹாரிஸ்

by Bella Dalima 08-11-2020 | 8:06 PM
Colombo (News 1st) இந்திய மற்றும் ஜமைக்க வம்சாவளி அமெரிக்க பிரஜையான 55 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக அமெரிக்க அரசியல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் பதிவாகியுள்ளார். கறுப்பின பெண் முதன்முறையாக அமெரிக்காவின் உயர் பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், ஜனநாயகத்தைக் காப்பாற்றி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதன்போது, நம்பிக்கையுடன் அமெரிக்கா சென்ற தனது தாயை அவர் நினைவுகூர்ந்துள்ளார். கனவுகள் சாத்தியமாவதற்கு தனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். யாருக்கு வாக்களித்திருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதியளித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள முதல் பெண் நான். கடைசிப் பெண் அல்ல. இது ஆரம்பமே... ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் துணிச்சல் பைடனுக்கு உள்ளது. இனவெறியை அகற்றுவோம் என உறுதிப்படக் கூறுகிறேன்
என கமலா ஹாரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.