ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது

by Staff Writer 08-11-2020 | 11:44 AM
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 22 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை இரண்டாயிரத்து 832 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 425 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இன்றைய தினமும், பொலிஸ் விசேட குழுக்களினூடாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார். ஆகவே, மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, சமூக இடைவௌியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் இதனை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனடிப்படையில் கடந்த 09 நாட்களில் இந்த நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று மாத்திரம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.