08-11-2020 | 6:13 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 562 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,285 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 5,100 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்...