ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது

24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது

by Staff Writer 07-11-2020 | 10:47 AM
Colombo (News 1st) இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 21 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை 2682 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 403 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் , சமூக இடைவௌியை பேணுவதுடன் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இந்த நடைமுறைகளை பின்பற்றாதவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பயணங்களை மட்டுப்படுத்தி வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டார். அதேபோன்று, ஏனைய பகுதிகளில் வசிப்போர் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு ஒன்றுகூட வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.