வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கத் திட்டம்

வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 07-11-2020 | 3:36 PM
Colombo (News 1st) நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தௌிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு முன்னரும் இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்திருந்தோம். ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில், மினுவாங்கொடை கொத்தணி ஆரம்பமான போது, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முதல் நாடளாவிய ரீதியில், பதிவு செய்யப்பட்ட கிளினிக் நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக கிராம சேவகர்கள், பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இந்த திட்டத்தினூடாக, வயோதிபர் மற்றும் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவர்கள் தமக்கான மருந்துகளை வீடுகளிலேயே பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்
என சுதத் சமரவீர குறிப்பிட்டார்.