சலுகையை வழங்காவிடில் சீனிக்கு வரி அறவிடப்படும்

சீனி விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்காவிடில் மீண்டும் வரி அறவிடப்படும்: பந்துல குணவர்தன

by Staff Writer 07-11-2020 | 8:53 PM
Colombo (News 1st) சீனி விலை குறைப்பின் சலுகையை நுகர்வோருக்கு வழங்காவிடில், மீண்டும் வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அரசாங்கம் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரியை நீக்கியது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீனியை 85 ரூபாவிற்கே விற்பனை செய்ய முடியும். எனினும், அரசாங்கம் இறக்குமதி வரியை நீக்கியதன் சலுகை மக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என உணவக உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.