by Staff Writer 07-11-2020 | 7:44 PM
Colombo (News 1st) கேகாலை - புளத்கொஹுபிட்டிய, லெவல தோட்டத்தில் மின்னல் தாக்கி 67 வயதானவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மழையுடன் கூடிய வானிலை நிலவியது.
இதன்போது, லெவல லயன் குடியிருப்பிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த 67 வயதானவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்தினால் லயன் குடியிருப்புகளின் சில வீடுகளிலுள்ள மின் சாதனங்களும் சேதமடைந்துள்ளன.