பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை

பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை

பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2020 | 9:09 pm

Colombo (News 1st) 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சில மாநிலங்களுக்கான முடிவுகள் உட்பட இறுதி முடிவு இன்னமும் வௌியாகாத நிலையில், டொனால்ட் ட்ரம்பை விட ஜோ பைடன் முன்னிலையிலுள்ளார்.

போர்க்கள மாநிலங்கள் சிலவற்றில் ஜனாதிபதி ட்ரம்பை பின்தள்ளி ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் களமிறங்கினர்.

வௌியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஜோ பைடன் அதிகளவிலான தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களாகக் கருதப்பட்ட பென்சில்வேனியா, நெவேடா, வட கரோலினா, அலாஸ்கா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் இதுவரை வௌியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் டொனால்ட் ட்ரம்ப் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜோ பைடன் இருபதாயிரம் வாக்குகளினால் முன்னிலை பெற்றுள்ளார்.

நேற்று இரவு முதல் தற்போது வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், 264 தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், மேலும் உறுப்பினர்களைப் பெற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாகை சூடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்