பழைய போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா

பழைய போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா

பழைய போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2020 | 3:51 pm

Colombo (News 1st) பழைய போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, வெலிக்கடை சிறைச்சாலையில் 196 கைதிகளுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், அங்கு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்