by Staff Writer 07-11-2020 | 3:45 PM
Colombo (News 1st) சீனாவின் ஒக்டோபர் மாத ஏற்றுமதி 19 மாதங்களில் இல்லாதளவு மிக துரிதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
கொரோனா தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சீனாவின் பொருளாதாரம் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகின்றது.
இந்த நிலையில், ஏற்றுமதியைப் போலவே இறக்குமதியும் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் மாத ஏற்றுமதி 9.3 வீதமாக அதிகரிக்குமென ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது 11.4 வீதமாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 9.9 வீதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.