by Staff Writer 07-11-2020 | 3:56 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 537 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,723 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 5,217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 12,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுவரை 30 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.