கொரோனா தொற்றால் இன்று நால்வர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் இன்று நால்வர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் இன்று நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2020 | 10:24 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரழந்தோர் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

01. மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயதான பெண் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

02. பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். COVID-19 தொற்றுக்குள்ளான இவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

03. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த இவர், சில நாட்களாக நீடித்த காய்ச்சலின் காரணமாக அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

04. கனுவல்ல பகுதியை சேர்ந்த 88 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர் மூலம் தொற்றுக்குள்ளாகியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பல்லேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து பின்னர் IDH-இற்கு மாற்றப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்