ஊரடங்கு சட்டத்தை கட்டங்கட்டமாக தளர்த்த நடவடிக்கை

ஊரடங்கு சட்டத்தை கட்டங்கட்டமாக தளர்த்த நடவடிக்கை

ஊரடங்கு சட்டத்தை கட்டங்கட்டமாக தளர்த்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2020 | 10:04 pm

Colombo (News 1st) நாளை மறுதினம் (09) ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொற்றுக்குள்ளான மேலும் 400 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தைத் தொகுதியுடன் தொடர்புடையவர்களாவர்.

அதனடிப்படையில், மினுவாங்கொடை, பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 12,970 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து 537 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

அந்த வகையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,723 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 5,217 பேர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்