இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர் ராமேஸ்வரத்தில் கைது

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர் ராமேஸ்வரத்தில் கைது

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர் ராமேஸ்வரத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2020 | 8:44 pm

Colombo (News 1st) இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ஒருவரை தமிழகத்தின் ராமேஸ்வரம் பொலிசார் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குள் நேற்றிரவு நுழைந்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் ராமேஸ்வரம் வேதாரண்யம் பகுதியில் குறித்த மூவரையும் கடலோர காவல் படையினரும் Q பிரிவு பொலிசாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய நிதி மோசடியினை மேற்கொண்டு தலைமறைவானவரே தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்