பதுகம புதிய குடியேற்றம் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பதுகம புதிய குடியேற்றம் விடுவிப்பு

by Staff Writer 06-11-2020 | 4:15 PM
Colombo (News 1st) மத்துகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக COVID-19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்ட கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மேல் மாகாணம், எஹலியகொட, குருநாகல் பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.