தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீள திறக்க தீர்மானம்

அடுத்த வாரமளவில் மத்திய  தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீளவும் திறக்க தீர்மானம்

by Staff Writer 06-11-2020 | 1:25 PM
Colombo (News 1st) தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த வாரமளவில் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீளவும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு மத்திய தபால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், 30 அலுவலகப் பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு PCR மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தபால் சேவையூடாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது.

ஏனைய செய்திகள்