வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2020 | 3:41 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலதிகக் கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க கொரோனா பரவல் காரணமாக அலுவலகப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாளின் பின்னர் அபராதத்தை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய மூடப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் தபாலகங்களும் மூடப்பட்டுள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்