Women's T20 செலன்ஞ் தொடரில் வெலாசிட்டி அணி வெற்றி

Women's T20 செலன்ஞ் தொடரில் வெலாகசிட்டி அணி வெற்றி

by Staff Writer 05-11-2020 | 1:44 PM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடருக்கு இணையாக நடத்தப்படும் Women's T20 செலன்ஞ் தொடரின் முதலாவது போட்டியில் வெலோசிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது. Women's T20 செலன்ஞ் தொடர் அபுதாபியில் நடைபெறுகின்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தப்பத்து, முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஆகியோர் சுப்பர் நோவாஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நேற்றைய போட்டியில் வெலோசிட்டி மற்றும் சுப்பர் நோவாஸ் அணிகள் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெலோசிட்டி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர்நோவஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. சமரி அத்தப்பத்து அணி சார்பில் அதிக பட்சமாக 44 ஓட்டங்களை பெற்றதுடன், சஷிகலா சிறிவர்தன ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெலாசிட்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. சுனே லூஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றார். இந்தியாவில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தடவை IPL மற்றும் Women's T20 செலன்ஞ் கிரிக்கெட் தொடர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற சஷிகலா, சமரி ஆகியோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டதன் பின்னர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.