யாழில் 213 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

யாழ். வடமராட்சியில் 63 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

by Staff Writer 05-11-2020 | 7:17 PM
Colombo (News 1st) யாழ் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 63 மில்லியன் ரூபா என கடற்படை அறிவித்துள்ளது. வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடத்துவதற்காக தயார்ப்படுத்தப்பட்ட 213 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டனர். கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளில் இன்று காலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். வெற்றிலைக்கேணி, உடுத்துறை மற்றும் ஆழியவளை பகுதிகளை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அவர்களின் டிங்கி படகு மற்றும் கஞ்சாவுடன் பளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்து. கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில், தமிழகத்திலிருந்து கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.