நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி; மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 05-11-2020 | 9:06 AM
Colombo (News 1st) மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளையில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 5 பிரதேச செயலளார் பிரவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹலியொட, குருவிட்ட, எலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.