பாராளுமன்ற பேரவை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது

பாராளுமன்ற பேரவை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது

பாராளுமன்ற பேரவை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2020 | 10:01 am

Colombo (News 1st) 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட பாராளுமன்ற பேரவை இன்று (04) முதல் தடவையாக கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற பேரவை கூடவுள்ளது.

மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் தலைமையிலான பாராளுமன்ற பேரவையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

பாராளுமன்ற பேரவைக்கு பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பெயரிடப்பட்டுள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக பாராளுமன்ற பேரவை பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்