சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து GMOA விலகல்  

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து GMOA விலகல்  

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2020 | 3:05 pm

Colombo (News 1st) சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாங்கள் அறிந்த வகையில் சமூகத்திற்குள் அதிகளவு தொற்று பரவியுள்ளது. தொடர்ந்தும் எமக்கு PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. PCR பரிசோதனைகள் மேற்கொள்வதில் காணப்படும் பற்றாக்குறை முதலாவது பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம். ஜீபிஎஸ் ஊடாக அவ்வாறு இல்லாவிடின் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண முடியாது போகும். இதனை நாங்கள் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றோம். அது இன்னமும் இடம்பெறவில்லை. நேற்றைய தினமும் நாங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடினோம். இதனை தொடர்ந்தும் முன்னெடுக்காவிடின் தொழில்நுட்ப முறையை பின்பற்றக்கூடிய நடைமுறையை இவர்கள் எதிர்காலத்தில் தொடர்வார்களா என்பது தெரியவில்லை. எனவே சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு செயற்பாடுகளில் பங்கேற்பதை நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜீபிஎஸ்ஸை செயற்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை இந்த வாரத்திற்குள் முன்வைக்காவிடின் நாங்கள் உறுதியான தீர்மானத்தை எட்ட வேண்டி ஏற்படும்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர், வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்