அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2020 | 10:32 pm

Colombo (News 1st) அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி வகைகளை விற்பனை செய்ய வேண்டிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,

* வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) – 94 ரூபா
* பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை – 94 ரூபா
* நாட்டரிசி – 92 ரூபா
* பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) – 89 ரூபா என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று (04) முதல் நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்