தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய வழிவகை 

தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் 

by Staff Writer 03-11-2020 | 8:01 PM
Colombo (News 1st) கொரோனா பரவலினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இலக்கங்களினூடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பணிப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, விந்திக்க பிரியரத்ன - 0713 976 406 ரசிக்க விஜேகோன் - 0113 158 114 சித்தாரா ஜயசேன - 077 08 20 775 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என தொழில் அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.