ஐவரி கோஸ்ட் தேர்தலில் Alassane Ouattara வெற்றி

ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி தேர்தலில் Alassane Ouattara வெற்றி

by Staff Writer 03-11-2020 | 10:20 PM
Colombo (News 1st) ஐவரி கோஸ்ட் (Ivory Coast) ஜனாதிபதி அலெசெனி ஒட்டாரா (Alassane Ouattara) மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஜனாதிபதி அலெசெனி கடந்த மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 94. 27 வீதமான வாக்குகளை பெற்றுள்ளார். 78 வயதான அலெசெனி நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 90 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் வாக்களிப்பதை தவிர்க்குமாறு தமது ஆதரவாளர்களை வலியுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐவரி கோஸ்ட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் 2 தடவைகளே ஆட்சியில் அமர முடியும். எனினும் 2016 ஆம் ஆண்டு தம்மால் அனுமதிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் பிரகாரம் மூன்றாவது தடவையாக ஆட்சியமைக்க முடியும் என ஜனாதிபதி அலெசெனி தெரிவித்துள்ளார்.