மருமகள் தாக்கியதில் வயோதிப பெண் உயிரிழப்பு

மருமகள் தாக்கியதில் வயோதிப பெண் உயிரிழப்பு

by Staff Writer 02-11-2020 | 3:27 PM
Colombo (News 1st) நுவரெலியா - நானுஓயா - சமர்செட் தோட்டத்தில் மருமகளினால் தாக்கப்பட்டு வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வயோதிப பெண்ணை சுமார் 20 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டதாக அவரின் மருமகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. பள்ளத்தில் வீழ்ந்த 73 வயதான மூதாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நானுஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.