கொரோனா ; புராதன நகரான Machu Picchu மீள திறப்பு

கொரோனா தொற்று; புராதன நகரான Machu Picchu மீள திறப்பு

by Chandrasekaram Chandravadani 02-11-2020 | 12:02 PM
Colombo (News 1st) ​பெரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து மூடப்பட்டிருந்த, அன்டீஸ் (Andes) மலைத்தொடரின் புராதன நகராகிய Machu Picchu 8 மாதங்களின் பின்னர் மீள திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை பார்வையிடுவதற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 675 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முன்னர் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளின் 30 வீதமாகும். மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான இதனை மீள திறந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்கா மத வழிபாடுகளை பெரு அதிகாரிகள் ஒழுங்கமைத்திருந்தனர். Machu Picchu புராதன நகரை உலக மரபுரிமை சொத்தாக 1983 இல் யுனெஸ்கோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.