இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 

by Staff Writer 02-11-2020 | 8:59 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளது. பொலிஸ் நிலையங்களில் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் இதற்காக 7000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், தம்மை பதிவு செய்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். இதற்காக பல வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கம்பஹா மாவட்டத்திலும் பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.