கேகாலையிலுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளையும் தற்காலிகமாக மூட தீர்மானம் 

கேகாலையிலுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளையும் தற்காலிகமாக மூட தீர்மானம் 

கேகாலையிலுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளையும் தற்காலிகமாக மூட தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2020 | 2:59 pm

Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் வறக்காபொல உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் பத்மகுமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2850 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்