தொழிலதிபர் கெளதம் கிச்லுவை மணந்தார் காஜல் அகர்வால்

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை மணந்தார் காஜல் அகர்வால்

by Bella Dalima 31-10-2020 | 4:24 PM
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் நேற்று (30) திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழில் கடைசியாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் OTT-இல் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தொழிலதிபர் கெளதம் கிச்லுவை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.