கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட திருமணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு

கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட திருமணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு

கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட திருமணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2020 | 2:53 pm

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் நடத்தப்பட்ட திருமண வைபவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகக் குழுவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

கொள்ளுப்பிட்டி – காலி முகத்திடலை அண்மித்துள்ள நட்ச்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று திருமண வைபமொன்று நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண வைபவம் நடைபெறுகின்றமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.

நேற்று, குறித்த நட்சத்திர ஹோட்டலின் பணிப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் திருமண வைபவத்தை ஏற்பாடு செய்தவர்கள் ஹோட்டல் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்