கந்தப்பளை வாராந்த சந்தைகளில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு மாத்திரம் அனுமதி

கந்தப்பளை வாராந்த சந்தைகளில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு மாத்திரம் அனுமதி

கந்தப்பளை வாராந்த சந்தைகளில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு மாத்திரம் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2020 | 1:57 pm

Colombo (News 1st) நுவரெலியா- கந்தப்பளை நகரில் இடம்பெறும் வாராந்த சந்தைகளில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் வாராந்த சந்தைக்கு கடந்த வாரம் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தைக்கு வலப்பனை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மரக்கறிகள் கிடைப்பதாக நுவரெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளது.

தொற்று பரவுவதைக் கருத்திற்கொண்டு வாராந்த சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர் வர்த்தகர்களுக்கு மாத்திரம் எதிர்வரும் நாட்களில் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்