இலங்கைக்கான புதிய சீன தூதுவர் நியமனம்

இலங்கைக்கான புதிய சீன தூதுவர் நியமனம்

இலங்கைக்கான புதிய சீன தூதுவர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2020 | 9:02 pm

Colombo (News 1st) இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Qi Zhenhong நேற்று (30) இலங்கையை வந்தடைந்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள புதிய சீன தூதுவர் இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைக்குள்ளாகியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சர்வதேச கல்வி நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட Qi Zhenhong 1988 ஆம் ஆண்டு அந்நாட்டு இராஜதந்திர சேவையில் இணைந்துகொண்டார்.

சீன வௌிவிவகார அமைச்சின் கொள்கை வகுப்பு பிரிவில் சேவையாற்றியுள்ள அவர், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார்.

ஒரு வழி ஒரு திட்டம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் Qi Zhenhong விசேட நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

ஒரு வழி ஒரு திட்டத்தை ஸ்தாபித்தல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு பயன் கிடைக்கும் வகையில், அதனை நடைமுறைப்படுத்துதல் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும் வலயத்தில் சமாதானத்தையும் வளமான பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் புதிய தூதுவர் நேற்று இலங்கையை வந்தடைந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, Qi Zhenhong விமான நிலையத்தில் இராஜதந்திரியொருவருக்கு வழங்கும் வரவேற்பினையும் நிராகரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்