மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 30-10-2020 | 1:43 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (29) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வேறு பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டதை கவனத்திற்கொள்ளாமல் பொதுமக்கள் சிலர் வௌியேற முயற்சிக்கின்றமை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்