நியூஸிலாந்தில் கருணைக் கொலைக்கு மக்கள் ஆதரவு

நியூஸிலாந்தில் கருணைக் கொலைக்கு மக்கள் ஆதரவு

by Bella Dalima 30-10-2020 | 3:17 PM
 Colombo (News 1st) நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள், கருணைக்கொலையை சட்டரீதியாக்குவதற்கு ஆதரவானவையாக அமைந்துள்ளன. கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இன்று வௌியாகிய முடிவுகளில் 65.2 வீதமானமை 2019 ஆம் ஆண்டின் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான தெரிவுச்சட்டத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் புதிய சட்டமாகி, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கும் குறைந்த வாழ்க்கைக் காலத்தைக் கொண்ட கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான தெரிவை செய்ய இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கு 2 வைத்தியர்கள் அனுமதியளிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.