துருக்கியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Bella Dalima 30-10-2020 | 7:55 PM
Colombo (News 1st) மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கியுள்ளன. இதனால் சமோஸ் துறைமுகத்தில் வெள்ளம் புகுந்து சிறிதளவில் சுனாமி ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் Izmir மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால், கரையோர நகரங்களில் கட்டடங்கள் பல அழிவடைந்துள்ளன. துருக்கியின் Izmir மாகாண மக்கள் பாதுகாப்புத் தேடி வீதிகளில் கூடியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அப்பகுதியில் குறைந்தது 20 கட்டடங்கள் அழிவடைந்திருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். துருக்கியின் Bornova மற்றும் Bayrakli பகுதிகளிலும் கட்டடங்கள் அழிவடைந்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Suleyman Soylu தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்பு விபரங்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.